மங்களம் மனவளக்கலை யோகா தவமையத்தில் இன்று முதல் (18.04.2011) மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில் இன்று 40 மாணவ, மாணவியர் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர்.
மகளிர்க்கான "மனவளக்கலை அறிமுகப் பயிற்சி" கடந்த 11.03.2011 முதல் 10.30 - 12.45 மணிவரை தினமும் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்ட பெண்களுக்கு இன்று "துரிய தீட்சை" வழங்கப்பட்டது.
மங்கலம் மனவளக்கலை யோகா தவமையத்தில் 08.03.2011 மற்றும் 09.03.2011 அன்று நடந்த நோயற்ற வாழ்வைத் தேடி இயற்கை வாழ்வியல் பயிற்சி முகாமில் நடைபெற்ற நிகழ்வுகளில் ஒரு சில தேன் துளிகள்.....